விஸ்வரூபம் படமும் முதல்வருக்கு கடிதமும்

Thursday, January 24, 2013

அனுப்புனர்,
இஸ்லாமியன்

பெறுனர்,
தமிழக முதல்வர்,
சென்னை

பொருள்:உணர்வுகள் காயப்படுத்தப்படாமல் இருக்க நிரந்தர தீர்வு தேவை.

தமிழக முதல்வர் அவர்களுக்கு,
                               
                                     ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக.INNOCENCE OF MUSLIM என்ற படத்தின் மூலம் எங்கள் உயிரினும் மேலான இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களை கொச்சைப்படுத்தி உலகெங்கிலும் வாழும் எங்கள் இஸ்லாமியர்களின் உணர்வுகளை கேவலப்படுத்திய நிகழ்வு சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்ததை தாங்கள் மறந்திருக்கமாட்டீர்கள்.
அந்த நிகழ்வின் நிழல் மறைவதற்குள் துப்பாக்கியால் நடிகர் விஜயும்,டைரக்டர் முருகதாசும் இஸ்லாமிய தீவிரவாதம் என்கிற குண்டை கொண்டு எங்கள் உள்ளங்களை துளைத்து காயப்படுத்தினார்கள்.தீவிரவாதிகள் என்றாலே பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் (அங்குள்ளவர்களை காட்டினாலும் இஸ்லாத்தோடு ஒன்றிணைந்த இஸ்லாமிய தீவிரவாதிகளாகத் தான் காட்டுவார்கள்) என்று படங்களிலே காட்சிப்படுத்தும் வழமையான சப்பைக்கட்டு சினிமாவின் நிலையிலிருந்து முற்றிலும் மாறி தீவிரவாதிகள் இந்தியாவில் அதுவும் உங்கள் பக்கத்து வீட்டில் வாழும் ஒரு இஸ்லாமியனாக கூட இருக்கலாம் என்ற கீழ்த்தனமான சிந்தனையை தூண்டும் விதமாக அமைத்து எங்களை கேவலப்படுத்தினார்கள்.இதற்கே சொல்லெனா மனத்துயரத்தில் நாங்கள் வேதனைப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் விஸ்வரூபம் எடுத்து தன் விஷரூபத்தை கொணர இருக்கிறார் நடிகர் கமல் ஹாசன்.

இது சம்மந்தாமாக அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் குழுவினர் இந்தப்படத்தை கமலின் இல்லத்திலே சென்று பார்த்துவிட்டு அனைவரும் ஒருமித்த கருத்தில் ''இந்திய வரலாற்றில் இதுபோல் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கேவலப்படுத்தும் ஒரு படம் வெளியாகவே இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்''.

BBC ரேடியோவிற்கு பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பேட்டி தரும்பொழுது ஒரு பன்னிரண்டு வயது இஸ்லாமிய சிறுவனை தீவிரவாத சிந்தனையோடு வளர்வது போலவும்,ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் குர்ஆனையும்,தொழுகையையும் தொடர்புபடுத்திவுள்ளார்கள்,இன்னும் சொல்லப்போனால் தமிழக முஸ்லிம்கள் கூட இஸ்லாமிய தீவிரவாதிகள் என்கிற அடிப்படையிலே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.அவர் மேலும் கூறுகையில் இஸ்லாமியர்கள் மீது  வெறுப்பையும் விரோததத்தையும் ஏற்படுத்தும் காட்சிகளை மட்டும் வெட்டிவிட்டு படத்தைமட்டும் திரையிடமுடியுமா என்றால் முடியாது ஏனென்றால் ''படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது'' என்றும் கூறினார்.ஆகவே தமிழகத்தில் நிலவி வரும் ஒரு நல்ல சூழலை  கெடுக்கும் வகையிலும்,முஸ்லிம்களை வேண்டும் என்றே நீ தீவிரவாதி என்று சொல்லி எங்களின் மனநிம்மதியை கெடுக்கும் இந்த விஸ்வரூபம் படத்தை வெறும் 15 நாள் திரையிடாமல் தள்ளிவைத்தது மட்டுமல்லாமல் அது எத்தனை 100 கோடிகளிலும் எடுத்தாலும் நிரந்தரமாக அப்படத்தை வெளியிடாமல் தடுக்க ஆவன செய்யவேண்டும் அப்பொழுது தான் இதுபோன்ற படங்கள் எடுப்பதை தவிர்க்கலாம்.ரத்தமும் சதையும் உள்ள மற்ற மனிதர்கள் போல எங்களுக்கும் உயிருண்டு.நாங்கள் வேற்று கிரகவாசிகள் அல்ல.எங்களுக்கும் மனதுண்டு,உணர்வுண்டு.எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்,எங்களை காயப்படுத்தும் கயவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.நன்றி

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

    அவசியமான கருத்துக்கள். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தடைக்கு பிறகும் வரக்கூடாது. இடைக்காலத் தடை ஒரு கண் துடைப்பாக இல்லாமல் இருக்கவேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

    உங்களின் இந்த பதிவையும் என் பதிவில் அப்டேட் செய்துவிட்டேன் சகோ.

    ReplyDelete
  2. வ அலைக்கும் சலாம் ,

    என் பதிவை இணைத்தமைக்கும் உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.....

    ReplyDelete